search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கோட்டையில் நெய் அருவி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை - மலைப்பாதை அடைக்கப்பட்டது
    X

    நெய் அருவிக்கு செல்லும் மலைப்பாதை கதவு அடைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

    செங்கோட்டையில் நெய் அருவி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை - மலைப்பாதை அடைக்கப்பட்டது

    • குண்டாறு அணையில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் நெய்யருவி உள்ளது.
    • ஜீப்களில் அருவிக்கு செல்லும்போது பேராபத்து நடக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

    செங்கோட்டை:

    செங்கோட்டையில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் குண்டாறு அணைக்கட்டு உள்ளது. இந்த அணையில் இருந்து மலையில் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றால் நெய்யருவி உள்ளது.

    குற்றாலத்தில் குளிப்பதற்கு கூட்டம் அதிகமாக இருக்கும்போது, சுற்றுலா பயணிகள் இந்த நெய் அருவிக்கு படையெடுப்பார்கள். இந்த அருவியை சுற்றி ஏராளமான தனியார் அருவிகள் உள்ளன. இந்த அருவிகளுக்கு செல்வதற்கான சாலை மிகவும் கரடு முரடாக, குண்டும்,குழியுமாக இருப்பதால் சொகுசு கார்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாது. எனவே ஜீப் மூலம் தான் செல்ல முடியும். தற்போது நெய் அருவிக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வர தொடங்கி உள்ளனர். இதனால் குண்டாறு அணையில் ஏராளமான ஜீப்கள் குவிந்துள்ளது. இந்த ஜீப்களில் அருவிக்கு செல்லும்போது குறுக்கிடும் ஓடையை கடக்கும் போது எதிர்பாரா வண்ணம் பேராபத்து நடக்க வாய்ப்புகள் அதிகம் என்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஜீப்களின் உறுதி தன்மையை ஆய்வு செய்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.

    அதன் அடிப்படையில் ஆர்.டி.ஓ. லாவண்யா தலைமையில் தாசில்தார் முருக செல்வி முன்னிலையில் அதிகாரிகள் நெய் அருவி செல்லும் மலைப்பாதையில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து அருவிக்கு செல்ல தடை விதித்து மலை பாதை கேட்டை பூட்டினர்.

    Next Story
    ×