இதமான சீதோசனத்தால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் உற்சாகம்

குணாகுகை, மோயர் பாயிண்ட், தூ ண்பாறை, பசுமை ப்பள்ள த்தாக்கு உள்ளிட்ட இடங்க ளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. மேலும் அங்கு விளைவிக்கப்படும் காய்கறி களை சுற்றுலா பயணி கள் ஆர்வமாக வாங்கி சென்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

கொடைக்கானல்:

மலைகளின் இளவ ரசியான கொடைக்கானலை காண வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகி ன்றனர். கடந்த சில நாட்க ளாக தொடர்ந்து மழை பெய்தது. கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதியிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.

இதனால் பல்வேறு சுற்றுலா இடங்களும் வெறி ச்சோடி காணப்பட்டன. ஆனால் தற்போது கொடை க்கானலில் மேகமூட்டத்து டன் கூடிய இதமான சீதோசனம் நிலவி வருகிறது. மேலும் மலைப்பகுதியில் தரையிறங்கும் மேக கூட்டத்தை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். வார விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காண ப்பட்டது. கொடை க்கானலில் உள்ள தங்கும் விடுதிகள் அனை த்தும் நிரம்பி உள்ளது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா, வெள்ளி நீர்வீழ்ச்சி, பைன்பாரஸ்ட், குணாகுகை, மோயர் பாயிண்ட், தூ ண்பாறை, பசுமை ப்பள்ள த்தாக்கு உள்ளிட்ட இடங்க ளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. மேலும் நகரின் மைய ப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் உற்சா கமாக படகு சவாரியும், ஏரிச்சாலையில் சைக்கிள் மற்றும் குதிரை சவாரியும் செய்து மகிழ்ந்தனர்.

கடந்த சில நாட்களாக மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூண்டி, பூம்பாறை பகுதிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகி ன்றனர். இதனால் மன்ன வனூரில் உள்ள சூழல் சுற்றுலா மையம், எழு ம்பள்ளம் ஏரியில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேலும் அங்கு விளைவிக்கப்படும் காய்கறி களை சுற்றுலா பயணி கள் ஆர்வமாக வாங்கி சென்றனர். தொடர்மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்ப டைந்துள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்த காரணத்தினால் வாகன போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இனி வரும் காலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com