பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் வினியோகம் தொடங்கியது

வீடு, வீடாக ரேஷன் ஊழியர்கள் வழங்கினர். 10 லட்சத்துக்கும் மேற்பட்ட அரிசி குடும்ப அட்டைதாரரர்கள் உள்ளனர்.
பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் வினியோகம் தொடங்கியது
Published on

கோவை:

பொங்கல் தொகுப்பு தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு, ரூ.1000 ரொக்கம் ஆகியவை அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்தது.

வருகிற 9-ந் தேதி பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.அன்றே அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட அரிசி குடும்ப அட்டைதாரரர்கள் உள்ளனர். ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் அனைவருக்கும் பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்பட உள்ளது. டோக்கன் வழங்கும் பணி இன்று தொடங்கியது.

ரேஷன் ஊழியர்கள் வீடு, வீடாகச் சென்று டோக்கன் வினியோகம் செய்தனர். வருகிற 8-ந்தேதி வரை டோக்கன் வழங்கப்படுகிறது.

இந்த டோக்கனில் பரிசு தொகுப்பு வழங்கும் நாள், வழங்கப்படும் நேரம் உள்ளிட்டவை இடம் பெற்று உள்ளது. அந்த நேரத்தில் சென்று பொங்கல் தொகுப்பினை பெற்று கொள்ளலாம்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் 10 லட்சத்து 88 ஆயிரம் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களில் 1089 பேர் இலங்கை தமிழர்கள். இவர்கள் அனைவருக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் இன்று முதல் வழங்கப்படு கிறது.

ஒரு கடையில் ஒரு நாளைக்கு 200 டோக்கன் வழங்க திட்டமிட்டுள்ளோம். டோக்கன் வழங்கியதும் வருகிற 9-ந்தேதி முதல் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com