சங்கரன்கோவிலில் புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது

சங்கரன்கோவில் ராஜபாளையம் சாலையில் டவுன் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 50 கிலோ புகையிலை பொருட்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது.
சங்கரன்கோவிலில் புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது
Published on

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் ராஜபாளையம் சாலையில் டவுன் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தனர். அவர் சங்கரன்கோவில் கிருஷ்ணசாமி வீதியைச் சேர்ந்த சக்திவேல் (வயது 26) என்பதும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 50 கிலோ புகையிலை பொருட்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 31,000 என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து புகையிலை பொருட்களையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com