search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நல்லாசிரியர் விருதுபெற  கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  10 ஆசிரியர்கள் தேர்வு
    X

    நல்லாசிரியர் விருதுபெற கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10 ஆசிரியர்கள் தேர்வு

    • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து 32 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
    • பயிற்சி நிறுவன ஆசிரியர் உட்பட 10 பேருக்கு இவ்விருது வழங்கப்படும்.

    கிருஷ்ணகிரி

    ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 5-ம் தேதி ஆசிரியர் தினத்தை முன்னிட்டு வழங்கப்படும் நல்லாசிரியர் விருதுக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து 32 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வழங்கப்படும் 10 விருதுகளுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையிலான தேர்வுக்குழு மதிப்பீடு செய்து பட்டியலை கல்வி கமிஷனருக்கு அனுப்ப வேண்டும். அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 20 பேரில் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை சேர்ந்த நான்கு ஆசிரியர்கள், உயர்நிலைப்பள்ளிகளை சேர்ந்த நான்கு ஆசிரியர்கள், தனியார் பள்ளியை சேர்ந்த ஒரு ஆசிரியர் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன ஆசிரியர் உட்பட 10 பேருக்கு இவ்விருது வழங்கப்படும்.

    இதில், உயர்நிலைப்பள்ளி பிரிவில் கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மகேந்திரன், தளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் வெங்கடேஷ ரெட்டி, ஒசூர் ஒன்றியம் சமத்துவபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் ராஜாராம், கெலமங்கலம் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் திம்மப்பா ஆகிய நால்வருக்கு நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி பிரிவில் மத்தூர் ஒன்றியம் முத்தாகவுண்டனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சவுந்திரபாண்டியன், தளி ஒன்றியம் பின்னமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகேசா, மத்தூர் ஒன்றியம் குண்டேப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகன், ஊத்தங்கரை ஒன்றியம் நாப்பிராம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சரஸ்வதி ஆகிய நால்வருக்கும் நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற வுள்ள விழாவில் அனை வருக்கும் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

    Next Story
    ×