search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போத்தனூர், குனியமுத்தூர் போலீஸ் நிலையங்களில் காலியாக உள்ள இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்
    X

    போத்தனூர், குனியமுத்தூர் போலீஸ் நிலையங்களில் காலியாக உள்ள இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்

    • இதுவரை குனியமுத்தூர் போலீஸ் நிலையத்திற்கு புதிதாக இன்ஸ்பெக்டர் பணிநியமனம் செய்யப்படவில்லை.
    • 2 போலீஸ் நிலையங்களிலும் வழக்குகளை விசாரிப்பதற்கு போலீசாருக்கு தடுமாற்றம் அடைகின்றனர்.

    குனியமுத்தூர்,

    கோவை மாநகரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள போத்தனூர், குனியமுத்தூர் போலீஸ் நிலையங்கள் நகரின் முக்கியத்துவம் வாய்ந்த போலீஸ் நிலையங்கள் ஆகும்.

    குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய தெய்வசிகாமணி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

    அதன் பிறகு இதுவரை குனியமுத்தூர் போலீஸ் நிலையத்திற்கு புதிதாக இன்ஸ்பெக்டர் பணிநியமனம் செய்யப்படவில்லை.

    அதேபோன்று போத்தனூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய நடேசன் கடந்த மாதம் 26-ந் தேதி புதிதாக திறக்கப்பட்ட சுந்தராபுரம் போலீஸ் நிலையத்திற்கு இன்ஸ்பெக்டராக நியமனம் செய்யப்பட்டார்.

    இதனால் அங்கும் இன்ஸ்பெக்டர் பணியிடம் காலியாக உள்ளது. இதனால் 2 போலீஸ் நிலையங்களிலும் வழக்குகளை விசாரிப்பதற்கு போலீசாருக்கு தடுமாற்றம் ஏற்பட்டு வரும் சூழ்நிலை உள்ளது என பொதுமக்கள் தெரிவித்தனர்.

    2 காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி மிகவும் பரந்து விரிந்ததாகும். ஏற்கனவே 2 காவல் நிலையங்களிலும் போலீஸ் பற்றாக்குறை இருந்து வரும் சூழலில் இன்ஸ்பெக்டர் பணியிடமும் நிரப்பப்படவில்லை என்பதால் பொதுமக்கள் அதிருப்தியில் இருப்பதாக தெரிவிக்கின்றனர். எனவே குனியமுத்தூர், போத்தனூர் ஆகிய 2 போலீஸ் நிலையங்களுக்கு உடனே இன்ஸ்பெக்டர்கள் நியமனம் செய்ய வேண்டும் என கோவை மாநகர போலீஸ் கமிஷனருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×