டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் தாமதமின்றி வெளியிடப்படும்- எஸ்.கே.பிரபாகர்

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் முறையாக நடத்தப்படும். கால தாமதத்தை குறைப்பது தான் எங்களது முதல் பணி.
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் தாமதமின்றி வெளியிடப்படும்- எஸ்.கே.பிரபாகர்
Published on

சென்னை:

சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் புதிய டி.என்.பி.எஸ்.சி.தலைவராக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி எஸ்.கே.பிரபாகர் பதவியேற்றார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் முறையாக நடத்தப்படும். தேர்வுக்கு பிறகு முடிவுகள் உடனடியாக வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு பணிகளில் சேர வேண்டும் என்ற கனவோடு ஏராளமானவர்கள் அரசு தேர்வுகளை எழுதி வருகி றார்கள். அதற்கு அரசு பணியாளர் தேர்வாணையம் கால அட்டவணை தயாரித்து நடத்தி வருகிறது.

இந்த தேர்வுகளை நேர்மையாக நடத்த தலைவர் என்ற முறையில் நான் உறுதி யளிக்கிறேன். தேர்வு முடிவு கள் உடனடியாக வெளியிட அனைத்து நடவடிக்கை களும் எடுப்போம்.

இந்த தேர்வுகளைத் தாண்டி மற்ற போட்டி தேர்வுகளையும் மாணவர்கள் எழுதுகிறார்கள். இரு தேர்வு தேதிகளும் ஒரே நாளில் இல்லாதவாறு பார்த்துக் கொள்வோம்.

தேர்வுக்கும், தேர்வு முடிவுகளுக்கும் இருக்கும் இடைவெளியை நிச்சயம் குறைக்க நடவடிக்கை எடுப்போம். கால தாமதத்தை குறைப்பது தான் எங்களது முதல் பணி.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பெரிய புகார்கள் இல்லாமல் தரமான முறையில் அரசு தேர்வுகள் நடத்தி வருகிறது. இதை மேம்படுத்தும் நடவடிக்கையும் எடுக்கப் பட்டு வருகிறது

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com