search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்களுக்கு 20 சதவீத போனஸ்: தமிழ்நாடு அரசு உத்தரவு
    X

    நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்களுக்கு 20 சதவீத போனஸ்: தமிழ்நாடு அரசு உத்தரவு

    • நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
    • சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு போனஸ் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 2022-2023-ம் ஆண்டுக்கான போனஸ் 8.33 சதவீதம் மற்றும் கருணைத் தொகை 11.67 சதவீதம் என 20 சதவீதம் போனஸ் தொகை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    போனஸ் சட்டத்தின் கீழ்வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அவர்களுடைய சம்பளத்தில் 20 சதவீதம் (போனஸ் மற்றும் கருணைத்தொகை) வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.

    இதுதவிர, தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ.3,000 கருணைத்தொகையாக வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.

    இதன்படி, சுமார் 49,023 பணியாளர்களுக்கு ரூ.29 கோடி போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்க ஆணையிடப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×