

திருப்பூர்:
திருப்பூர் கல்லூரி ரோடு அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை விழாவையொட்டி தினமும் மாலை 6.45 மணிக்கு கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன. தினமும் மாலை 6.30 மணிக்கு நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன.
இன்று மாலை 3.30மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது. நாளை 4-ந்தேதி பிரகதீஸ்வரா நாட்டியாலயாவின் பரதநாட்டிய நிகழ்ச்சி, 5-ந்தேதி ஆன்மீக சொற்பொழிவாளர் மங்கயர்க்கரசியின் ஆலய வழிபாடு முறைகள் என்ற தலைப்பில் சொற்பொழிவு நடக்கிறது.
தொடர்ந்து 6-ந்தேதி திருப்பூர் சுமதியின் அய்யப்பன் மகிமை, 7-ந்தேதி ராமாயணத்தில் நாம் கற்றுக்கொள்ளும் பாடம் என்ற தலைப்பிலும் ஆன்மீக சொற்பொழிவு நடக்கிறது.
வருகிற 8-ந்தேதி நாகை முகுந்தனின் எது தவம், 9-ந்தேதி எது பக்தி, 10-ந்தேதி முப்பது நாளும் பவுர்ணமி என்ற ஆன்மீக சொற்பொழிவு, வருகிற 11-ந்தேதி கூட்டு வழிபாடும், 12-ந்தேதி ஏலேலங்கடியோ கலைக்குழுவின் கிராமிய கலைநிகழ்ச்சி, 13-ந்தேதி திருச்சி கல்யாணராமனின், கம்பன் கண்ட கஜேந்திர மோட்சம், 14-ந்தேதி பிரஹலாத சரித்திரம், 15-ந்தேதி குசேலனும் கண்ணனும் என்ற ஆன்மீக சொற்பொழிவு நடக்கிறது.
வருகிற 16-ந்தேதி காலை 7.45மணிக்கு தொடங்கும் லட்சார்ச்சனை, 17-ந்தேதி மாலை நிறைவு பெறுகிறது. 18-ந்தேதி முனைவர் கணேசனின் நல்ல வண்ணம் வாழலாம் என்ற சொற்பொழிவும், 19-ந்தேதி புலவர் ராமலிங்கம் தலைமையிலான இறைவனை ஈர்ப்பது பக்தியா, தொண்டா என்ற தலைப்பிலான பட்டிமன்றம் நடக்கிறது.
வருகிற 20-ந்தேதி ஸ்ரீசத்ய சாய் சேவா சமிதியின் பக்தி பஜனை, 21-ந்தேதி திருப்பூர் வித்யாவின் பகவத் நாம மகிமை, பக்தி சொற்பொழிவு, 22-ந்தேதி மல்லிகா சம்பத்தின் பிதாமகன் பீஷ்மர் பக்தி நடக்கிறது.
வருகிற 23-ந்தேதி வக்கீல் தேன்மொழியின் இன்றைய சூழ்நிலையில் ஆன்மீகத்தின் பங்களிப்பு என்ற ஆன்மீக சொற்பொழிவு, வருகிற 24-ந்தேதி ஸ்ரீகாவியா நிர்த்ராலயா குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி, 27-ந்தேதி ஆழ்வை கண்ணனின், இறையும் இன்பமும், ஆன்மீக சொற்பொழிவு ஆகிய நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.
கலைநிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீஅய்யப்பன் பக்த ஜனசங்கம், ஸ்ரீதர்மசாஸ்தா டிரஸ்ட் நிர்வாகிகள் செய்துள்ளனர்.