மூடப்பட்ட நீர் வழி தடங்களை மீண்டும் ஏற்படுத்திட வேண்டும்

சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல் கனமழையால் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது
மூடப்பட்ட நீர் வழி தடங்களை மீண்டும் ஏற்படுத்திட வேண்டும்
Published on

செங்கம்:

செங்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் நேற்று பிற்பகல் நேரத்தில் சுமார் ஒரு மணி நேரம் இடைவிடாமல் கனமழை பெய்தது. இந்த மழையால் பல்வேறு கிராமப் பகுதிகளில் இருப்பிடங்களை சுற்றி தண்ணீர் சூழ்ந்தது.

குறிப்பாக கரியமங்கலம், மண்மலை, பேயாலம்பட்டு, முறையாறு உள்ளிட்ட பகுதிகளில் இருப்பிடங்களில் தண்ணீர் சூழ்ந்தது. கிராம பகுதிகளில் அடைக்கப்பட்டுள்ள நீர்வழி தடங்களை மீண்டும் ஏற்படுத்தி தண்ணீர் நிற்காமல் நீர் வழித்தடங்களில் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com