சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

சைல்டு லைன் டிரஸ்ட் அமைப்பை சேர்ந்தவர்கள் சிறுமி திருமணம் குறித்து விசாரணை மேற்கொண்டதில் திருமணம் நடைபெற்றதை உறுதி செய்தனர்.ராதாகிருஷ்ணனை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

பல்லடம் : 

பல்லடம் அருகே உள்ள கிராம பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை அவரது உறவினரான ராதாகிருஷ்ணன்(வயது 25) என்ற வாலிபர் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த சைல்டு லைன் டிரஸ்ட் அமைப்பை சேர்ந்தவர்கள் சிறுமி திருமணம் குறித்து விசாரணை மேற்கொண்டதில் திருமணம் நடைபெற்றதை உறுதி செய்தனர்.

இதையடுத்து பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், ராதாகிருஷ்ணனை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com