உடுமலை சங்கரின் 7-ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம்

சங்கர் சமூக நீதி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கௌசல்யா தலைமை வகித்தார்.சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சங்கர் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்ற காட்சி.
சங்கர் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்ற காட்சி.
Published on

உடுமலை :

உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் நடந்த கொடூர சம்பவத்தில் காதல் திருமணம் செய்த சங்கர் சாதீய வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டார்.இந்நிலையில் சங்கர் நினைவேந்தல் கூட்டம் குமரலிங்கபுரத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு சங்கர் சமூக நீதி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கௌசல்யா தலைமை வகித்தார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் கி.கனகராஜ்,தமிழ் புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன்,விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில செய்தி தொடர்பாளர் இரா.விக்ரமன்,தமிழ் தேசிய விடுதலை இயக்க வழக்கறிஞர் சுதாகாந்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இதில் சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com