search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செல்பி எடுத்த வாலிபர்கள் ரெயில் மோதி பலியான சம்பவம்
    X

    செல்பி மோகத்தால் பலியான இளைஞர்களின படம்

    செல்பி எடுத்த வாலிபர்கள் ரெயில் மோதி பலியான சம்பவம்

    • ரெயில் தண்டவாளத்தில் நின்று செல்போனில் செல்பி எடுத்துள்ளனர்.
    • விதிகளை மீறி தண்டவாளத்தை கடந்து சென்றாலோ, தண்டவாளத்தில் நின்று செல்பி எடுக்க முயன்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பூர் ரெயில்வே போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    திருப்பூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த தாமரைக்கரையைச் சேர்ந்தவர் பாண்டியன் (23).இவரது நண்பர் அதே ஊரைச் சேர்ந்த விஜய் (23), இவர்கள் இருவரும் திருப்பூரில் உள்ள நிட்டிங் நிறுவனத்தில் தொழிலாளர்களாக பணியாற்றி வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று விடுமுறையை முன்னிட்டு இருவரும் அணைப்பாளையம் பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்போது ெரயில் தண்டவாளத்தில் நின்று செல்போனில் செல்பி எடுத்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த வழியாக வந்த ெரயில் மோதி இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

    இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருப்பூர் ரெயில்வே காவல் துறையினர் இருவரது உடலையும் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    நேற்று விடுமுறை என்பதால் பாண்டியன், விஜய் இருவரும் நண்பர்களுடன் சேர்ந்து ரெயில் தண்டவாளம் பகுதிக்கு வந்துள்ளனர். அங்கு மது அருந்திய பின்னர் பாண்டியன், விஜய் மட்டும் ரெயில் வரும்போது ரெயிலுடன் சேர்த்து 'செல்பி' எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து தண்டவாளத்தை ஒட்டி நின்றுள்ளனர்.

    அப்போது நெல்லையில் இருந்து பிலாஸ்பூர் செல்லும் பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் 2 பேர் மீதும் மோதியது. இதில் பாண்டியன், விஜய் இருவரும் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரெயில் மோதி பலியான 2 பேரின் உடல்களை பார்த்து அவர்களுடன் வந்த நண்பர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.'செல்பி' மோகத்தால் வாலிபர்கள் 2 பேர் ரெயில் மோதி பலியான சம்பவம் திருப்பூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    எனவே விதிகளை மீறி தண்டவாளத்தை கடந்து சென்றாலோ, தண்டவாளத்தில் நின்று செல்பி எடுக்க முயன்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பூர் ரெயில்வே போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    Next Story
    ×