விசைத்தறி சங்க தலைவருக்கு மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி

கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் பழனிச்சாமி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தனர்50 மரக்கன்றுகள் நட்டு பசுமை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மரக்கன்றுகள் நடப்பட்ட காட்சி. 
மரக்கன்றுகள் நடப்பட்ட காட்சி. 
Published on

பல்லடம் :

கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் பழனிச்சாமி மற்றும் அவரது மனைவி கருப்பாத்தாள் ஆகியோர் கடந்த வாரம் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தனர். சாவிலும் இணைபிரியாத அந்த தம்பதியருக்கு, காரணம்பே ட்டை மகிழ்வனம் தாவரவியல் பூங்காவில் 50 மரக்கன்றுகள் நட்டு பசுமை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கோவை ,திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க செயலாளர் குமாரசாமி தலைமை தாங்கினார். கோடாங்கிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் காவி. பழனிசாமி,விசைத்தறி சங்க பொருளாளர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மகிழ்வனம் அமைப்பின் செயலர் சோமு என்ற பாலசுப்பிர மணியம், தாவரவியல் அறிஞர் மாணிக்கம், கூப்பிடு பிள்ளையார் கோயில் கமிட்டி தலைவர் சின்னசாமி, ஊராட்சி செயலர் கண்ணப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com