பல்லடம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் திருட்டு

பழனிசாமி நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்றிருந்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் தாயம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 55 ). விவசாயி. இவர் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்றிருந்தார். பின்னர் மதியம் வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்ததில் வீட்டில் பீரோவில் வைத்திருந்த ரூ. 2 லட்சம் பணம் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து பழனிசாமி அவினாசி பாளையம் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு போன சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே அவிநாசிபாளையம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் திருட்டுகள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விவசாயிகள், பொதுமக்கள் ஏற்கனவே புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com