பல்லடம் அருகே திருடர்களை விரட்டியடித்த பொதுமக்கள்

சின்னையா கார்டன் பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. குடியிருப்பு வாசிகள் டார்ச் லைட்டை வீடுகளில் அடித்து உஷாராகினர்.
கண்காணிப்பு கேமராவில் பதிவாகிய திருடர்களின் உருவம்.
கண்காணிப்பு கேமராவில் பதிவாகிய திருடர்களின் உருவம்.
Published on

பல்லடம் :

பல்லடம் நகராட்சிகுட்பட்ட கொசவம்பாளையம் ரோடு பகுதியில் உள்ளது சின்னையா கார்டன் இந்த பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் திருடர்கள் 3 பேர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தனர்.

காலியாக இருந்த வீட்டுக்குள் நுழைந்தவர்கள், அங்கிருந்து எதுவும் கிடைக்காமல், அடுத்த வீட்டுக்குச் சென்றுள்ளனர். அப்போது அந்தப் பகுதி வாசி ஒருவர் அவர்களை பார்த்து விட்டார். இதையடுத்து குடியிருப்பு வாசிகளுக்கு அவர் தகவல் கொடுத்தார். இதனால் உஷாரான குடியிருப்பு வாசிகள் வீடுகளில் விளக்கை எரியவிட்டும், டார்ச் லைட்டை வீடுகளில் அடித்தும் உஷாராகினர். மேலும் அந்தப் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் மாட்டப்பட்டு இருப்பதை கண்டு திருடர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் பொதுமக்களிடம் மாட்டினால் தர்ம அடி கிடைக்கும் என பயந்த திருடர்கள் அங்குள்ள வீட்டில் காய போட்டு இருந்த துணிகளை எடுத்து முகத்தை மறைத்துக் கொண்டு, இருட்டுப் பகுதியில் குதித்து தப்பி ஓடினர். அதன் அருகே உள்ள டி.எம்.எஸ். கார்டன் பகுதியில் திருடலாம் என்று சென்றபோது, திருடர்கள் குறித்த தகவல் பல்லடம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு அவர்கள் ரோந்து பணிக்கு வந்து விட்டனர். போலீசார் வருவதைத் தெரிந்து கொண்ட திருடர்கள் அங்கிருந்த காட்டுப்பகுதிக்குள் சென்று மறைந்தனர். இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருடர்கள் வீட்டினுள் புகுவது, துணிகளை முகத்தில் கட்டி கொள்வது போன்ற கண்காணிப்பு கேமரா காட்சிகள் பல்லடம் பகுதியில் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com