திருப்பூர் மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் நாளை நடக்கிறது

காலை 10 மணிக்கு மாமன்ற கூட்ட அரங்கில் மேயர் தலைமையில் நடைபெற உள்ளது. நிதிக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் ஆலோசனைக்கூட்டம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெறறது.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

திருப்பூர் :

திருப்பூர் மாநகராட்சியின் 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டம் நாளை 31-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு மாமன்ற கூட்ட அரங்கில் மேயர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற உள்ளது.

பட்ஜெட் கூட்டத்தை முன்னிட்டு நிதிக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் ஆலோசனைக்கூட்டம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார். துணை மேயர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். நிதிக்குழு தலைவர் கோமதி குமார் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்று ஆலோசனை நடத்தினார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com