வைகாசி விசாகத்தை முன்னிட்டு பல்லடம் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

16 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
முத்துக்குமாரசுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த காட்சி.
முத்துக்குமாரசுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த காட்சி.
Published on

பல்லடம் :

பல்லடம் வட்டார பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதன்படி, பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி திருக்கோவிலில், வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதில் முத்துக்குமாரசுவாமிக்கு பன்னீர், சந்தனம், இளநீர், தேன், பால் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.இதேபோல பல்லடம் காந்தி ரோட்டில் உள்ள அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவில், பொன்காளியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில், பச்சாபாளையம் மாகாளியம்மன் கோவில், பனப்பாளையம் மாரியம்மன் கோவில், உள்ளிட்ட கோவில்களில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com