என் மலர்
உள்ளூர் செய்திகள்

விபத்தில் கால்களை இழந்த பெண்ணுக்கு ரூ.48 லட்சத்திற்கான இழப்பீடு தொகை வழங்கப்பட்ட காட்சி.
திருப்பூர் மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் பல்வேறு வழக்குகளுக்கு சுமூக தீர்வு
- விபத்தில் கால்களை இழந்த பெண் ஒருவருக்கு ரூ.48 லட்சத்திற்கான இழப்பீடு தொகை உடனடியாக வழங்கப்பட்டது.
- மக்கள் நீதிமன்றம் நிகழ்வானது திருப்பூரில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
திருப்பூர்:
தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணை குழு அறிவுறுத்தலின்படி திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பாக மக்கள் நீதிமன்றம்( லோக் அதாலத் )நிகழ்வானது திருப்பூரில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதியுமான சொர்ணம் நடராஜன் தலைமை தாங்கினார். இதில் நிலுவையில் உள்ள வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு, வங்கி கடன், காசோலை வழக்குகள், குடும்ப நல வழக்கு , சிவில் வழக்கு உள்ளிட்ட வழக்குகளுக்கு சமரசம் செய்யப்பட்டு தீர்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு காசோலைகள் வழங்கப்பட்டு வருகிறது.இதில் விபத்தில் கால்களை இழந்த பெண் ஒருவருக்கு ரூ.48 லட்சத்திற்கான இழப்பீடு தொகை உடனடியாக வழங்கப்பட்டது.






