search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செம்மையான ஆட்சியின் அடையாளம் செங்கோல் - திருப்பூர் ஆதீனங்கள் பேட்டி
    X

    கோப்புபடம்

    செம்மையான ஆட்சியின் அடையாளம் செங்கோல் - திருப்பூர் ஆதீனங்கள் பேட்டி

    • 1947ம் ஆண்டு, திருவாடுதுறை ஆதீனம் தம்புரான் சுவாமிகளால் அப்போதைய பாரத பிரதமர் நேருவின் கைகளில் செங்கோல் வழங்கப்பட்டது.
    • ஆதீன கர்த்தகர்கள் முன்னிலையில், பாராளுமன்ற அரங்கில் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது.

    அவினாசி:

    அருங்காட்சியகத்தில் கைத்தடியாக இருந்ததை செங்கோலாக நிறுவி பிரதமர் மோடி இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார் என காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமி புகழாரம் சூட்டினார்.

    பல்லடத்தில் இது குறித்து அவர் கூறியதாவது:-

    அனைத்து இன மக்களும் வாழும் நம் நாட்டில் அனைத்து மத பிரார்த்தனைகளுடன் 21 குரு மஹா சன்னிதானங்கள் ஆசி வழங்க பாரத பிரதமர் கரங்களால் புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மையப்பகுதியில் செங்கோல் நிறுவப்பட்டது.செங்கோல் மேல் பகுதியில் பசு சின்னம் உள்ளது. இந்துக்கள் தர்ம தேவதையாக பசுவை வழிபடுகின்றனர்.தமிழகத்தில் இருந்து 1947ம் ஆண்டு, திருவாடுதுறை ஆதீனம் தம்புரான் சுவாமிகளால் அப்போதைய பாரத பிரதமர் நேருவின் கைகளில் செங்கோல் வழங்கப்பட்டது.அது அருங்காட்சியகம் ஒன்றில் 'கைத்தடி' என்று எழுதி வைக்கப்பட்டிருந்தது.

    ஆனால் இன்று நம் பாரத பிரதமர் மோடி நம் மண்ணின் மைந்தர்களால் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவி அதற்கு சிறப்பு சேர்த்துள்ளார்.செங்கோல் முன் பிரதமர் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கியது பெருமிதம் கொள்ளும்படியாக உள்ளது.தமிழகத்தில் உள்ள அனைத்து மடாதிபதிகளும், ஒரே இடத்தில் ஒன்று சேர்வது என்பது அவ்வளவு எளிய காரியம் அல்ல. நாட்டில் உள்ள தீமைகள் அழிந்து நாடு வளம் பெற வேண்டி அனைத்து குரு மஹா சன்னிதானங்களும் ஒரே இடத்தில் கூடி வழிபாடுகளை நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

    அவிநாசியிலுள்ள திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலய ஆதீனம் காமாட்சிதாச சுவாமி டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டட திறப்பு விழாவில் பங்கேற்று திரும்பினார்.

    அப்போது அவர் கூறியதாவது:- இந்து தர்மத்தை பின்பற்றும் இந்தியாவின் பெருமை இன்று உலக அரங்கில் உயர்ந்து நிற்கிறது.ஆதீன கர்த்தகர்கள் முன்னிலையில், பாராளுமன்ற அரங்கில் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது.அதிகாரம் பொருந்திய பிரதமர், செங்கோல் சகிதமாக வந்து ஆதீனங்களிடம் தனித்தனியே ஆசிபெற்று நிறுவியிருக்கிறார்.

    நாட்டில் செம்மையான ஆட்சி நடப்பதை உணர்த்தும் வகையில் பாராளுமன்ற மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த செங்கோலுக்கு பிரதமர் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கியதும், மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெலாம் என ஒலித்ததும் மெய்சிலிர்க்க வைத்தது.இந்தியாவில் செம்மையான ஆட்சி நடக்கிறது என்பதன் அடையாளமாகவும், உலக மக்களுக்கு வெளிப்படுத்தும் வகையில் பாராளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×