கடைகள், வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை வைக்க கோரிக்கை

பல்லடம் நகர பகுதியில் கடைகளின் பெயர் பலகைகள் ஆங்கிலத்தில் மட்டும் எழுதப்பட்டுள்ளது.சில கடைகளில் தமிழ் பெயர்கள் பெயர்பலகையின் ஓரத்தில் எழுதப்பட்டுள்ளது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

 திருப்பூர்:

திருப்பூர் கலெக்டரிடம் பல்லடம் அனுப்பட்டியை சேர்ந்த சமூக நல ஆர்வலர் கூட்டமைப்பை சேர்ந்த அண்ணாதுரை அளித்த மனுவில், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் கட்டாயம் தமிழில் இருக்க வேண்டும். மற்ற மொழிகள் அதற்கு கீழ் இடம்பெற உத்தரவு உள்ளது.

ஆனால் பல்லடம் நகர பகுதியில் கடைகளின் பெயர் பலகைகள் ஆங்கிலத்தில் மட்டும் எழுதப்பட்டுள்ளது. சில கடைகளில் தமிழ் பெயர்கள் பெயர்பலகையின் ஓரத்தில் எழுதப்பட்டுள்ளது. இது போன்ற பெயர்ப்பலகைகளை அகற்றி தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com