என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாய்ந்து விழுந்த மரத்தை படத்தில் காணலாம்.
சாய்ந்த மரத்தை அகற்ற கோரிக்கை
- கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, பலத்த காற்றால் சாய்ந்து விழுந்தது.
- துணை ஆட்சியருக்கு கடிதம் அனுப்பி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி அல்லாளபுரம் குட்டை அருகே தைல மரம் ஒன்று கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, பலத்த காற்றால் சாய்ந்து விழுந்தது. இதனை வருவாய்த்துறையினர் அகற்றவில்லை. இதுகுறித்து கரைப்புதூர் கிராம நிர்வாக அலுவலரிடம் கேட்டபோது மரம் சாய்ந்து விழுந்தது குறித்து துணை ஆட்சியருக்கு கடிதம் அனுப்பி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் அனுமதி கொடுத்த பின்பு தான் மரத்தை ஏலம் விட்டு அகற்றப்படும் என்றனர்.
Next Story






