திருப்பூரில் கோவிலுக்கு சொந்தமான ரூ.4 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு

கோயிலில் பத்திரங்களை ஆய்வு செய்த போது 10 சென்ட் நிலம் கோவிலுக்கு சொந்தானது என உறுதி செய்யப்பட்டது.அந்நிலத்தில் அர்ச்சகர்கள் வசித்து வந்தனர்.
மீட்கப்பட்ட நிலத்தை படத்தில் காணலாம்.
மீட்கப்பட்ட நிலத்தை படத்தில் காணலாம்.
Published on

திருப்பூர் :

திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோயில் பின்புறம் உள்ள 10 சென்ட் நிலத்தை திருப்பூரைச் சேர்ந்த சிதம்பரம் செட்டியார் மனைவி வள்ளியம்மாள் கோவில் கட்டளை பயன்பாட்டுக்காக 1963ல் தானமாக வழங்கியுள்ளார்.

அந்நிலத்தில் அர்ச்சகர்கள் வசித்து வந்தனர். அதன்பின் அவர்களை அப்புறப்படுத்தி தனியார் ஆக்கிரமித்தனர். பின் பயன்பாடு இன்றி புதர்மண்டிய நிலமாக இருந்து வந்தது. கோயிலில் பத்திரங்களை ஆய்வு செய்த போது 10 சென்ட் நிலம் கோவிலுக்கு சொந்தானது என உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து கோவில் நிர்வாகம் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மீட்டு கோவில் சுவாதீனத்துக்கு நிலத்தை எடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com