புதிய தார்சாலை அமைப்பு - மொரட்டுப்பாளையம் ஊராட்சி தலைவருக்கு பொதுமக்கள் நன்றி

தார் சாலை அமைத்து கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் ஆகிறது. ரூ.15 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்க உத்தரவிட்டார்.
புதிய தார் சாலை அமைக்கப்பட்டதை படத்தில் காணலாம்.
புதிய தார் சாலை அமைக்கப்பட்டதை படத்தில் காணலாம்.
Published on

பெருமாநல்லூர் :

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ஒன்றியம், மொரட்டுப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட திம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ளது சிவசக்தி நகர். இங்கு சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. இப்பகுதியில் தார் சாலை அமைத்து கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் ஆகிறது. இதனால் சாலை மிகவும் குண்டும் குழியுமாக மோசமான நிலையில் காணப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மொரட்டுப்பாளையம் ஊராட்சி தலைவர் என்.பிரபுவுக்கு உடனடியாக சாலை புதுப்பித்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதன் அடிப்படையில் தலைவர் பிரபு கனிமம் மற்றும் சுரங்க நிதியின் கீழ் ரூ.15 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்க உத்தரவிட்டார்.

அதன்படி தற்போது புதிய தார் சாலை அமைக்கப்பட்டது. இதன் மூலம் அப்பகுதி மக்கள் தங்களது கோரிக்கையை நிறைவேற்றிய தலைவருக்கு நன்றி தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com