உடுமலை அருகே குதிரையாறு சோதனை சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பு

சமூக விரோத செயல்கள் தடை இன்றி நடைபெற வாய்ப்புள்ளதாக இருந்தது. புகாரின் பெயரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள போலீசார்.
கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள போலீசார்.
Published on

உடுமலை:

உடுமலையிலிருந்து கொழுமம் வழியாக பழனி செல்லும் சாலையில் குதிரையாறு சோதனை சாவடி உள்ளது.

இங்கு குமரலிங்கம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட இந்த சோதனை சாவடியில் சமீப காலமாக போலீசார் யாரும் பணியில் இல்லை. இதனால் மணல் கடத்தல், அதிவேகமாக வாகனத்தில் செல்லுதல், மரங்களை வெட்டி கடத்துதல், பாதுகாப்பு பட்டியலில் உள்ள வனவிலங்களை வேட்டையாடுதல் போன்ற சமூக விரோத செயல்கள் தடை இன்றி நடைபெற வாய்ப்புள்ளதாக இருந்தது.

இது குறித்து இந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் குமரலிங்கம் சோதனை சாவடியில் போலீசாரை கண்காணிப்பு பணிக்கு நியமித்து உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com