பல்லடம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

கரைப்புதூர் ஊராட்சி வ. உ. சி. நகர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர்.பொது குடிநீர் தொட்டியில் இருந்து வீடுகளுக்கு முறைகேடாக குடிநீர் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி வ. உ. சி. நகர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர். இந்தநிலையில் முறையாக குடிநீர் வழங்கவில்லை என்றும், பலமுறை இதுகுறித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால், பெண்கள், ஆண்கள் , குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில்:- வ .உ .சி. நகர் பகுதிக்கு 20 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வருகிறது. குடிநீர் தொட்டியில் இருந்து விநியோகம் செய்யப்படும் குடிநீர்முறையாக வழங்கப்படுவதில்லை. இந்த நிலையில், பொது குடிநீர் தொட்டியில் இருந்து வீடுகளுக்கு முறைகேடாக குடிநீர் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய குடிநீர் அளவு குறைந்தும், சில சமயம் குடிநீர் கிடைக்காமலும் போகிறது.

எனவே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர். மறியல் போராட்டம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

குடிநீர் முறையாக வழங்கப்படும் என அவர் தெரிவித்ததை அடுத்து மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com