பல்லடம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நூலகம் திறப்பு

நீதிமன்ற வளாகத்தில் நூலக திறப்பு விழா நடைபெற்றது.பல்லடம் சார்பு நீதிபதி சந்தானகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
நூலகம் மற்றும் மறைந்த மூத்த வழக்கறிஞர்களின் உருவப் படத்தை திருப்பூர் மாவட்ட நீதிபதி சொர்ணம் நடராஜன் திறந்து வைத்த காட்சி.
நூலகம் மற்றும் மறைந்த மூத்த வழக்கறிஞர்களின் உருவப் படத்தை திருப்பூர் மாவட்ட நீதிபதி சொர்ணம் நடராஜன் திறந்து வைத்த காட்சி.
Published on

பல்லடம் :

பல்லடம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நூலக திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு பல்லடம் சார்பு நீதிபதி சந்தானகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சித்ரா முன்னிலை வகித்தார். வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் சக்திவேல் வரவேற்றார். விழாவில் நூலகம், மற்றும் மறைந்த மூத்த வழக்கறிஞர்கள் ராஜமாணிக்கம், ஈஸ்வரன், பாலசுப்பிரமணியம் ஆகியோரின் உருவப் படத்தை திருப்பூர் மாவட்ட நீதிபதி சொர்ணம் நடராஜன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள்,மூத்த வழக்கறிஞர்களின் குடும்பத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com