என் மலர்
உள்ளூர் செய்திகள்

குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்ற காட்சி.
பல்லடத்தில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம்
- நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்குகள் உள்பட சுமார் 50க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது.
- திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சசாங் சாய் உத்தரவின் பேரில், பல்லடம் துணை போலீஸ் சவுமியா தலைமையில், பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது.
பல்லடம்:
பல்லடம் உட்கோட்ட காவல்துறைக்கு உட்பட்ட பல்லடம்,மங்கலம், காமநாயக்கன்பாளையம், அவினாசி பாளையம், ஆகிய போலீஸ் நிலையங்களில், இடப் பிரச்சனை, பணம் கொடுக்கல்- வாங்கல் பிரச்சனை, உள்ளிட்ட நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள புகார்களுக்கு தீர்வு காணும் வகையில், திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சசாங் சாய் உத்தரவின் பேரில், பல்லடம் துணை போலீஸ் சவுமியா தலைமையில், பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்குகள் உள்பட சுமார் 50க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. இதில் 23 வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது இந்த நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், பல்லடம் மணிகண்டன், மங்கலம் கோபாலகிருஷ்ணன், காமநாயக்கன்பாளையம் ரவி, அவிநாசிபாளையம் கணேசன், மற்றும் போலீசார் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






