search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் அருகே பொதுமக்கள் உருவாக்கிய வனத்தில் பட்டா வழங்க எதிர்ப்பு
    X

    தாசில்தார் நந்தகோபாலிடம் பொதுமக்கள் மனு அளித்த காட்சி.

    பல்லடம் அருகே பொதுமக்கள் உருவாக்கிய வனத்தில் பட்டா வழங்க எதிர்ப்பு

    • அரசுக்கு சொந்தமான ஓடை நீர்வழி மற்றும் மந்தை புறம்போக்கு நிலம் சுமார் 10 ஏக்கர் உள்ளது.
    • பலவகை மரம், செடி,கொடிகள் நடப்பட்டு வனம் உருவாக்கி வைத்துள்ளனர்.

    பல்லடம் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இச்சிப்பட்டி கொத்துமுட்டி பாளையம் பகுதியில் அரசுக்கு சொந்தமான ஓடை நீர்வழி மற்றும் மந்தை புறம்போக்கு நிலம் சுமார் 10 ஏக்கர் உள்ளது. இந்த பகுதி பொதுமக்கள் அந்த நிலத்தில் முல்லைவனம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான பலவகை மரம், செடி,கொடிகள் நடப்பட்டு வனம் உருவாக்கி வைத்துள்ளனர். இதனிடையே இந்த அரசு நிலத்தில் சுமார் 5 ஏக்கர் நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு ஒதுக்கி தர அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.

    இதனிடையே அவர்களுக்கு பட்டா வழங்க வருவாய் துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் பரவியது. இதனைத் தொடர்ந்து கொத்துமுட்டி பாளையத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் பல்லடம் தாலுகா அலுவலகத்தில் வனத்தை அளித்து பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட்டு மாற்று இடத்தில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து தாசில்தார் நந்தகோபாலிடம் மனு அளித்துள்ளனர்.இது குறித்து அவர்கள் கூறுகையில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் அரசு நிலத்தில் பல ஆயிரக்கணக்கான நிழல் தரும் கனி தரும் மரம்,செடி,கொடிகளை நட்டு பொதுமக்கள் பராமரித்து வரும் நிலையில் அதனை அழித்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×