search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    என்.பி.எல்., கிரிக்கெட் லீக் போட்டி 7-ந்தேதி நடக்கிறது
    X
    கோப்புபடம்

    என்.பி.எல்., கிரிக்கெட் லீக் போட்டி 7-ந்தேதி நடக்கிறது

    • டாலர் இண்டஸ்ட்ரீஸ் - சுலோச்சனா காட்டன் ஸ்பின்னிங் மில்ஸ் நிறுவன அணிகள் மோதின.
    • இந்த போட்டியில் அனுகிரஹா வீரர் சதீஷ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    திருப்பூர் :

    பின்னலாடை நிறுவன அணிகளுக்கான என்.பி.எல்., கிரிக்கெட் தொடர் திருப்பூர் முதலிபாளையம் நிப்ட்-டீ ஆயத்த ஆடை வடிவமைப்பு கல்லூரியில் நடைபெற்று வருகிறது.நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் போட்டியில் டாலர் இண்டஸ்ட்ரீஸ் - சுலோச்சனா காட்டன் ஸ்பின்னிங் மில்ஸ் நிறுவன அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய டாலர் அணி நிர்ணயிக்கப்பட்ட 15 ஓவரில் 9 விக்கெட் இழந்து 71 ரன் எடுத்தது.தொடர்ந்து பேட்டிங் செய்த சுலோச்சனா அணி 13.2 ஓவரில் 5 விக்கெட் இழந்து 72 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது. 3 ஓவர்கள் வீசி 14 ரன் மட்டும் கொடுத்து, 4 விக்கெட் வீழ்த்திய சுலோச்சனாவின் சுழற்பந்து வீச்சாளர் பிரவீன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட்ஸ் - அமேஸிங் எக்ஸ்போர்ட்ஸ் அணிகள் மோதிய போட்டியில் முதலில் களமிறங்கிய ஈஸ்ட்மேன் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன் எடுத்தது.

    அடுத்ததாக பேட்டிங் செய்த அமேஸிங் 7 விக்கெட் இழப்புக்கு 90 ரன்னுடன் சுருண்டது. 16 பந்துக்கு 48 ரன் விளாசிய ஈஸ்ட்மேன் அணி வீரர் அஜித் குமார், ஆட்டநாயகனாக தேர்வானார்.மூன்றாவது போட்டியில், அனுகிரஹா பேஷன் மில் - வார்ஷா இன்டர்நேஷனல் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய அனுகிரஹா 7 விக்கெட் இழப்புக்கு 123 ரன் குவித்தது. இந்த அணியின் வீரர் சதீஷ் அரைசதம் கடந்து அசத்தினார். தொடர்ந்து ஆடிய வார்ஷா அணி 11.2 ஓவரிலேயே அனைத்து விக்கெட்களையும் பறிகொடுத்து 51 ரன்னில் ஆட்டமிழந்தது. இந்த போட்டியில் அனுகிரஹா வீரர் சதீஷ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.4-வது போட்டியில் தங்கமன் பேஷன் - சி.ஆர்., கார்மென்ட்ஸ் ஈகிள் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த தங்கமன் 12 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 48 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய சி.ஆர்., கார்மென்ட்ஸ் வெறும் 5.2 ஓவரில், 49 ரன் எடுத்து வெற்றிகண்டது. 3 ஓவருக்கு 10 ரன் மட்டும் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்திய சி.ஆர்., கார்மென்ட்ஸ் பவுலர் ஆல்பிரட் ஆட்டநாயகனாக தேர்வாகினார்.அடுத்த சுற்று லீக் போட்டிகள்வருகிற 7-ந்தேதி நடைபெற உள்ளது.

    Next Story
    ×