என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
  X

  கோப்புப்படம்

  அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு தகுதியானவர்கள் வருகிற 6-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் வினீத் அறிவித்துள்ளார்.
  • காலிப்பணியிட விவரங்கள் முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், வட்டார கல்வி அலுவலகங்களில் அறிவிப்பு பலகையில் நேற்று வெளி யிடப்பட்டுள்ளது.

  திருப்பூர்:

  ஊராட்சி ஒன்றிய, நகராட்சி அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு தகுதியானவர்கள் வருகிற 6-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் வினீத் அறிவித்துள்ளார். திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

  பள்ளி கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றியப்பள்ளி, நகராட்சிப்பள்ளி, அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியில் 2022-23-ம் கல்வியாண்டில் கடந்த மாதம் 1-ந் தேதி நிலவரப்படி காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளது.

  தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து மூலமான விண்ணப்பங்களை நேரடியாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ உயர்கல்வி தகுதிச்சான்றுகளுடன் மாவட்ட கல்வி அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். காலிப்பணியிட விவரங்கள் முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், வட்டார கல்வி அலுவலகங்களில் அறிவிப்பு பலகையில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

  அதன்படி திருப்பூர் கல்வி மாவட்டத்தை சேர்ந்தவர்கள், திருப்பூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அறை எண்.632-ல் உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்திலும், temporaryteacher.tiruppur@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் விண்ணப்பிக்கலாம். தாராபுரம் கல்வி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தாராபுரம் ஐந்து முக்கு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்திலும், temporaryteacher.dharapuram@ gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் விண்ணப்பிக்கலாம்.

  உடுமலை கல்வி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் உடுமலை ராஜேந்திரா ரோடு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்திலும், temporaryteacher.udumalpet@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும், பல்லடம் கல்வி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பல்லடம் மங்கலம் ரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள மாவட்ட கல்வி அலுலகத்திலும், temporaryteacher.palladam@gmail.com என்ற முகவரியிலும் விண்ணப்பிக்கலாம்.

  விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 6-ந் தேதி மாலை 5 மணி வரை ஆகும். தகவல் பலகையில் வெளியிடப்பட்டுள்ள காலிப்பணியிட விவரங்கள் மாறுதலுக்கு உட்பட்டது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

  Next Story
  ×