search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு புதிய அலுவலகம் கட்ட   நிதி ஒதுக்கீடு
    X

    கோப்புபடம். 

    திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு புதிய அலுவலகம் கட்ட நிதி ஒதுக்கீடு

    • பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நிரப்பப்பட வேண்டும்.
    • வரும் 28-ந் தேதி டெண்டர் இறுதி செய்யப்பட உள்ளது.

    திருப்பூர்:

    தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் சிறப்பு நிலை பேரூராட்சியாக இருந்த கோவை கருமத்தம்பட்டி, உளுந்தூர் பேட்டை, பேட்டை, திருக்கோவிலுார், சோளிங்கர், திருப்பூர் திருமுருகன்பூண்டி, மாங்காடு, திட்டக்குடி, தாரமங்கலம், பள்ளப்பட்டு, திருச்செந்தூர், முசிறி ஆகியவை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டன.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் பிரதிநிதிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.

    நகராட்சி கட்டமைப்பில் நிர்வாக அலுவலகம், நகரமைப்பு பிரிவு, பொறியியல் பிரிவு, சுகாதாரப்பிரிவு, பிறப்பு, இறப்பு சான்று வழங்கும் பிரிவு, வரி வசூல் மையம் என பல்வேறு பிரிவு அலுவலகங்கள் அமைக்கப்பட வேண்டும்.கமிஷனர் தலைமையில், ஒவ்வொரு பிரிவுக்கும் அதிகாரிகள் மற்றும் அலுவலர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நிரப்பப்பட வேண்டும்.

    அதற்கான பணிகள் படிப்படியாக நடந்து வரும் நிலையில் தரம் உயர்த்தப்பட்ட நகராட்சிகளுக்கு புதிய அலுவலகம் கட்ட அரசின் சார்பில் தலா ரூ.3.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில் 1.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கவும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.இந்த நிதியின் மூலம் புதிய அலுவலகத்துக்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. வரும் 28-ந் தேதி டெண்டர் இறுதி செய்யப்பட உள்ளது.

    Next Story
    ×