டென்னிஸ் போட்டி - அரசு பணியாளர்களுக்கு அழைப்பு

பங்கேற்க விருப்பம் உள்ள அரசுப்பணியாளர்கள் இன்று சென்னையில் உள்ள டென்னிஸ் அரங்க அலுவலரிடம் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

உடுமலை:

மாநில சிவில் சர்வீஸ் டென்னிஸ் போட்டியில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் (பொறுப்பு) ரவிச்சந்திரன் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வருகிற 3-ந்தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 2022ம் ஆண்டுக்கான மாநில சிவில் சர்வீசஸ் டென்னிஸ் போட்டி நடக்கிறது. பங்கேற்க விருப்பம் உள்ள அரசுப்பணியாளர்கள் இன்று சென்னையில் உள்ள டென்னிஸ் அரங்க அலுவலரிடம் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

விபரங்களுக்கு 044 28170381 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தேர்வு செய்யப்படும் வீரர்கள் வருகிற 4-ந்தேதிமுதல் 6-ந் தேதி வரை நடைபெற உள்ள தேசிய போட்டியிலும், சண்டிகரில் மார்ச் இரண்டாவது வாரம் நடக்கும் அகில இந்திய போட்டியிலும் பங்கேற்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com