போதை தகராறில் சாமி சிலையை உடைத்த வாலிபர்கள்

மதுரை வீரன் கோவில் பகுதியில் அந்த பகுதியை சேர்ந்த வாலிபர்கள் மதுபானம் அருந்துதல், சூதாட்டம் உள்ளிட்ட சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
உடைக்கப்பட்ட சாமி சிலை.
உடைக்கப்பட்ட சாமி சிலை.
Published on

பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள காமநாயக்கன்பாளையம் காலனி பகுதியில் மதுரைவீரன், பட்டத்தரசி அம்மன் கோவில் உள்ளது. சுமார் 100 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் முன்பாக வெங்ககல்லினால் ஆன மகாமுனி சிலை அமைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மதுரை வீரன் கோவில் பகுதியில் அந்த பகுதியை சேர்ந்த வாலிபர்கள் மதுபானம் அருந்துதல், சூதாட்டம் உள்ளிட்ட சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இது குறித்து அவ்வப்போது பொதுமக்கள் எச்சரிக்கை செய்தும் அவர்கள் நிறுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் நேற்று மாலை கோவில் அருகே சில இளைஞர்கள் மதுபானம் அருந்திவிட்டு பேசிக்கொண்டிருந்தனர். இதில் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. வாய்த்தகராறு முற்றி கைகலப்பாக மாறிய நிலையில் சிலர் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த மகாமுனி சிலையை உடைத்து, தகர்த்து எடுத்து வீசியுள்ளனர். 

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பொதுமக்கள் அந்த சிலையை தேடியபோது சிலை கிடைக்கவில்லை. இதையடுத்து காமநாயக்கன்பாளையம் போலீசில் புகார் அளித்துள்ளனர். போலீஸ் நிலையம் அருகிலேயே, குடிபோதையில், சாமி சிலை உடைக்கப்பட்டசம்பவம் காமநாயக்கன்பாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com