என் மலர்
உள்ளூர் செய்திகள்

பல்லடம் கோவில்களில் கால பைரவருக்கு சிறப்பு வழிபாடு
- காலபைரவருக்கு சந்தனம்,பால், தயிர், தேன், உள்ளிட்ட 18 வகை திரவியங்களால் சிறப்பு அபிசேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவரை வழிபட்டனர்.
பல்லடம்:
பல்லடம் வட்டார பகுதியில் உள்ள கோவில்களில் வைகாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதன்படி பல்லடம் மாதப்பூர் முத்துக்குமார சுவாமி மலைக்கோவிலில் வைகாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதில் காலபைரவருக்கு சந்தனம்,பால், தயிர், தேன், உள்ளிட்ட 18 வகை திரவியங்களால் சிறப்பு அபிசேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் தேய்பிறை அஷ்டமி விரதம் இருந்து கால பைரவரை தரிசித்தனர்.இதே போல பல்லடம் அருகே உள்ள மகா காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.இதே போல பல்லடம் பொன்காளியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவரை வழிபட்டனர்.






