search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாமளாபுரம்  லிட்ரசி மிஷன் மெட்ரிக்  பள்ளிமாணவர்களுக்கு  சிட்டுக்குருவி கூடுகள்
    X

    மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட சிட்டுக்குருவி கூடுகள்.

    சாமளாபுரம் லிட்ரசி மிஷன் மெட்ரிக் பள்ளிமாணவர்களுக்கு சிட்டுக்குருவி கூடுகள்

    • தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் பள்ளி வளாகத்தில் வழங்கப்பட்டன.
    • தலைவர் ராமமூர்த்தி முன்னிலையில் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

    மங்கலம்:

    உலக சிட்டுக்குருவிகள் தினம் ஆண்டுதோறும் மார்ச் 20-ந் தேதி உலகெங்கும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் குறைந்து வருவதன் காரணமாகவும், நாள்தோறும் தமது வாழ்வுக்காக அவை எதிர்நோக்கும் பிரச்சினைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி அதன் மூலம் அவர்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த மார்ச் மாதம் 20ந் தேதியன்று 2010-ல் இருந்து உலக சிட்டுக்குருவிகள் நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.

    திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பகுதியில் அமைந்துள்ள லிட்ரசி மிஷன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நாளை மார்ச் 20-ந்தேதி சிட்டுக்குருவிகள் தினம் கடைபிடிக்கப்படுவதையொட்டி 15 மாணவர்களுக்கு முதற்கட்டமாக சிட்டுக்குருவிக் கூடுகள் பள்ளித்தலைவர் ராமமூர்த்தி ஏற்பாட்டில், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் பள்ளி வளாகத்தில் வழங்கப்பட்டன.

    அழிந்து வரும் இனமான சிட்டுக்குருவிகளின் இனத்தை பெருக்கவும், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அவற்றிற்கு வாழ்வாதாரம் அளிக்கும் விதமாகவும், மாணவ பருவத்திலேயே உயிர்கள் மீதான மனிதத்தை வளர்க்கும் பொருட்டாகவும், மேலும் 150 குருவிக்கூடுகள் சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. அக்கூடுகளை நாளை உலக சிட்டுக்குருவிகள் தினத்தன்று லிட்ரசி மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தலைவர் ராமமூர்த்தி முன்னிலையில் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

    Next Story
    ×