என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மறுசுழற்சி  பாலியெஸ்டர் நூலில் தயாராகும் பின்னலாடை  பிரதமர் மோடிக்கு பரிசளிக்க திட்டம்
  X
  கோப்புபடம். 

  மறுசுழற்சி பாலியெஸ்டர் நூலில் தயாராகும் பின்னலாடை பிரதமர் மோடிக்கு பரிசளிக்க திட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • குன்னூரில் உள்ள ராணுவ படைத்தளத்தில் முறையான அனுமதி பெற்று துவங்கினோம்.
  • குடியரசு தினவிழா அணிவகுப்புக்கு மறுநாள் ராணுவ அதிகாரிகள் - பிரதமர் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கும்.

  திருப்பூர்:

  பருத்தி பின்னலாடை ஆடை உற்பத்தியில் புகழ்பெற்ற திருப்பூரில் தற்போது பாலியஸ்டர் பின்னலாடை உற்பத்தியும் சூடுபிடிக்க துவங்கிவிட்டது. குறைந்த விலையில் நீடித்து உழைக்கும் வகையிலான பாலியஸ்டர் பின்னலாடைகளுக்கு அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பு பெருகி வருகிறது.

  மத்திய அரசின், தூய்மை இந்தியா திட்டத்தை பின்பற்றி மறுசுழற்சி முறையில் நூல் மற்றும் ஆடை உற்பத்திக்கான முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை சேகரித்து அவற்றில் இருந்து மறுசுழற்சி பாலியஸ்டர் நூல்கள் தயாரிக்கும் தொழில்நுட்பம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது..

  பாலியஸ்டர் உட்பட மதிப்பு கூட்டப்பட்ட ஆடை உற்பத்தியில் களமிறங்கிய திருப்பூரை சேர்ந்த வால்ரஸ் நிறுவனம், யெஸ் இந்தியா கேன் என்ற அமைப்பை உருவாக்கி பாலியஸ்டர் பின்னலாடை உற்பத்தியை ஊக்குவித்து வருகிறது. இந்நிறுவனம் மறுசுழற்சி முறையில் தயாரிக்கப்பட்ட பாலியஸ்டர் நூலில் முதன்முதலாக பின்னலாடை தயாரித்து பிரதமர் மோடிக்கு பரிசளிக்க திட்டமிட்டுள்ளது.

  இது குறித்து யெஸ் இந்தியா கேன் இயக்குனர் வால்ரஸ் டேவிட் கூறியதாவது:-

  கரூரில் உள்ள நிறுவனத்தில் சேகரிக்கப்பட்ட பழைய தண்ணீர் பாட்டில்களில் இருந்து பாலியஸ்டர் நூலிழை தயாரிக்கும் முயற்சி வெற்றியடைந்துள்ளது. மறுசுழற்சி என்பது நம் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம். அதன்படி முதன்முதலாக மறுசுழற்சி பாலியஸ்டர் பின்னல் துணியில் இருந்து பிரதமர் மோடிக்கு, கோட் மற்றும் அங்கவஸ்திரம் தயாரித்து அனுப்ப திட்டமிட்டுள்ளோம்.

  குன்னூரில் உள்ள ராணுவ படைத்தளத்தில் முறையான அனுமதி பெற்று துவங்கினோம். பிரதமர் அலுவலகமும் நேரடியாக தொடர்பு கொண்டு ஆலோசனை வழங்கியுள்ளது. முதன்முதலாக, மிலிட்டரி பிரின்ட் கோட், ஆரஞ்சு, நீலம், மெரூன் நிற கோட் என 4 வகை கோட்களும், அங்கவஸ்திரங்களும் தயாராகி வருகின்றன.

  குடியரசு தினவிழா அணிவகுப்புக்கு மறுநாள் ராணுவ அதிகாரிகள் - பிரதமர் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கும். அப்போது பிரதமர் மற்றும் ராணுவ வீரர்களுக்கும் ஆடைகள் பரிசளிக்க அனுமதி பெற்றுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

  Next Story
  ×