search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிக்கண்ணா அரசு கல்லூரி மாணவர்கள் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு
    X

    சிக்கண்ணா அரசு கல்லூரியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நடைபெற்ற காட்சி. 

    சிக்கண்ணா அரசு கல்லூரி மாணவர்கள் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு

    • நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார்.
    • தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகவள்ளி, போதை தடுப்பு குறித்து பேசினார்.

    திருப்பூர்:

    தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் திருப்பூர் வடக்கு, திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு-2 சார்பில் நெகிழி இல்லா தமிழகம் கலைநிகழ்ச்சி திருப்பூர் மத்திய பஸ் நிலையம் முன் நடைபெற்றது. நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன்–கு–மார் முன்–னிலை வகித்தார். உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் ரமேஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசும்போது, 'பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும். நெகிழி பொருட்கள் அனைத்து உயிரினங்களுக்கும் ஆபத்தாக அமையும். அனைவரும் துணிப்பையை பயன்ப–டுத்த வேண்டும். பிளாஸ்டிக் இல்லா இந்தியாவை உருவாக்க சபதமேற்போம்' என்றார்.

    உதவி சுற்றுச்சூழல் பொறியாளர்கள் பாரதிராஜா, சத்தியன், சுற்றுச்சூழல் பொறியாளர் திப்பு சுல்தான் ஆகியோர் துணிப்பையை பயன்படுத்தும்போது இயற்கை எவ்வாறு பாதுகாக்கப்படு–கிறது என்பதை விளக்கி கூறினார்கள். தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகவள்ளி, போதை தடுப்பு குறித்து பேசினார். மாணவ செயலாளர்கள் காமராஜ், அருள்குமார், ராஜபிரபு ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலைநிகழ்ச்சிகள் நடத்தியும், மஞ்சப்பை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மாணவர் ஒருவர், பிளாஸ்டிக் அரக்கன் போல் வேடமணிந்து துண்டு பிரசுரங்கள் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சரவணக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×