search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அணைப்புதூா் அருகே  பதுக்கி வைத்திருந்த 1,080 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
    X

    கோப்புபடம். 

    அணைப்புதூா் அருகே பதுக்கி வைத்திருந்த 1,080 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

    • உதவி ஆய்வாளா் காா்த்திக், கிருஷ்ணன் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனா்.
    • அரிசியைப் பறிமுதல் செய்த காவல் துறையினா் அரிசியை பதுக்கிய அதே பகுதியை சோ்ந்த ராம்குமாா் (32) என்பவரை தேடி வருகின்றனா்.

    திருப்பூர்:

    குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை டிஜிபி., வன்னியபெருமாள் உத்தரவுப்படி திருப்பூர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க காவல் துறையினா் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.இதன் ஒரு பகுதியாக திருப்பூா், அவிநாசி சாலை அணைப்புதூா் அருகே உள்ள காட்டுப் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் உதவி ஆய்வாளா் காா்த்திக், கிருஷ்ணன் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனா்.

    அப்போது அங்கு 1,080 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அரிசியைப் பறிமுதல் செய்த காவல் துறையினா் அரிசியை பதுக்கிய அதே பகுதியை சோ்ந்த ராம்குமாா் (32) என்பவரை தேடி வருகின்றனா்.

    Next Story
    ×