

திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் 9 தாலுகாக்களில் ஜமாபந்தி வருகிற 24-ந் தேதி முதல் நடைபெற உள்ளது. பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான விண்ணப்பங்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த மனுக்கள் அளிக்கலாம். ஜமாபந்தி நடக்கும் அன்று காலை 10 மணிக்கு சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகங்களில் ஜமாபந்தி அதிகாரியால் நேரடியாக மனுக்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்து பின்னர் உடனடியாக தீர்வு காணப்படும். இதில் அனைத்துத்துறை அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் கிராம கணக்குகள் தணிக்கை செய்யப்படுகிறது.
அதன்படி ஊத்துக்குளி தாசில்தார் அலுவலகத்தில் கலெக்டர் வினீத் தலைமையில் வருகிற 24, 25-ந் தேதிகளில் ஜமாபந்தி நடக்கிறது. பல்லடம் தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் தலைமையில் வருகிற 24-ந் தேதி முதல் 27-ந் தேதி வரையும், அவினாசி தாசில்தார் அலுவலகத்தில் திருப்பூர் ஆர்.டி.ஓ. தலைமையில் வருகிற 24-ந் தேதி முதல் 27-ந் தேதி வரையும், திருப்பூர் வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரி தலைமையில் வருகிற 24, 25-ந் தேதிகளிலும், திருப்பூர் தெற்கு தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட வழங்கல் அதிகாரி தலைமையில் வருகிற 24-ந் தேதி முதல் 26-ந் தேதி வரையிலும் ஜமாபந்தி நடைபெற உள்ளது.
காங்கயம் தாசில்தார் அலுவலகத்தில் தாராபுரம் ஆர்.டி.ஓ. தலைமையில் வருகிற 24-ந் தேதி முதல் 27-ந் தேதி வரையும், தாராபுரம் தாசில்தார் அலுவலகத்தில் திருப்பூர் உதவி ஆணையாளர் (கலால்) தலைமையில் வருகிற 24-ந் தேதி முதல் அடுத்த மாதம் 2-ந் தேதி வரையும் (விடு–முறை நாட்கள், திங்கட்கிழமை தவிர), உடுமலை தாசில்தார் அலுவலகத்தில் உடுமலை ஆர்.டி.ஓ. தலைமையில் வருகிற 24-ந் தேதி முதல் 31-ந் தேதி வரையும் (விடுமுறை நாட்கள், திங்கட்கிழமை தவிர), மடத்துக்குளம் தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரி தலைமையில் வருகிற 24, 25-ந் தேதிகளில் ஜமாபந்தி நடைபெற உள்ளது.
இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.