என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  காங்கயத்தில் நடைபெறும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் முன்னேற்பாடு பணிகள்- அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு
  X

   வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் காங்கயம் மகாராஜா மஹாலை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்த காட்சி. அருகில் கலெக்டர் வினீத், மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், ஊரச வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன் உள்ளனர். 

  காங்கயத்தில் நடைபெறும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் முன்னேற்பாடு பணிகள்- அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இந்த முகாமில் 10ம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றவா்கள் பங்கேற்கலாம்.
  • மேலும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் காங்கயம் மகாராஜா மகாலை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

  திருப்பூர்:

  திருப்பூா் மாவட்டம், காங்கயம் ஸ்ரீ மஹாராஜா மஹாலில் தனியாா் துறை சாா்பில் வருகிற 2-ந்தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த வேலைவாய்ப்பு முகாம் முன்னேற்பாட்டுப் பணிகள் தொடா்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-

  இந்த தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் சென்னை, சேலம், கோவை, ஈரோடு மற்றும் திருப்பூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 200க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபா்களைத் தோ்வு செய்யவுள்ளனா்.

  இந்த முகாமில் 10ம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றவா்கள் பங்கேற்கலாம். அதேபோல, கல்லூரிகளில் இறுதியாண்டு படித்து வரும் மாணவ, மாணவிகளும் கலந்து கொள்ளலாம். இந்த முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளுக்கான பதிவு, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில்முனைவோா்களுக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் சாா்பில் வங்கிக்கடன் வழங்குவதற்கான ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளன. ஆகவே திருப்பூா் மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் இந்த முகாமினை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றாா்.

  கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் அ.லட்சுமணன், மகளிா் திட்ட இயக்குநா் மதுமிதா, தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் குமரேசன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் சுரேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.மேலும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் காங்கயம் மகாராஜா மகாலை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

  Next Story
  ×