

ஏப்ரல்1-ந் தேதி முதல் சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டம், மாத வருமான திட்டம், டெபாசிட் திட்டங்களுக்கு இனி வட்டித்தொகை வாடிக்கையாளரின் வங்கி கணக்கிற்கே நேரடியாக செலுத்தப்படும். வாடிக்கையாளரின் வங்கிக்கணக்கு இணைக்கப்படாமல் இருந்தால் தபால் அலுவலகம் வாயிலாகவோ, காசோலை மூலமாகவோ வட்டித்தொகை செலுத்தப்படும்.
சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டம், மாத வருமான திட்டம், டெபாசிட் ஆகியவற்றில் முதலீடு செய்தவர்கள் பலர் வட்டித்தொகை பெறுவதற்கு இன்னும் வங்கி சேமிப்புக்கணக்கை இணைக்காமலேயே இருப்பதாக தபால்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே தபால் அலுவலக திட்டங்களில் முதலீடு செய்வோர் வட்டித்தொகை பெறுவதற்கு வங்கிக்கணக்கை இணைக்கும்படி திருப்பூர் மாவட்ட தபால்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.