உடுமலையில் வேன் டிரைவர் மீது கொலை வெறி தாக்குதல்

கார் வாங்கியதில் பணம் தர தாமதம் ஆனதால் ஆத்திரமடைந்த கும்பல் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

உடுமலை:

உடுமலை வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த வேன் டிரைவர் மகேந்திர வர்மன்

(வயது 32). இவரது நண்பர் மகேஷ் குமார். இவர்கள் அந்த பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். 

அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் இருவரையும் ஆயுதங்களால் கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். கார் வாங்கியதில் பணம் தர தாமதம் ஆனதால் ஆத்திரமடைந்த கும்பல் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து உடுமலை போலீசார் விசாரணை செய்து வந்தனர். 

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக  குடிமங்கலம் வடுகபாளையத்தை சேர்ந்த விக்னேஷ் (26), ஓட்டமடம் கார்மேகம் (26), மருள்பட்டி நவீன் (28), உடுமலை ஜீவா நகர் அபிலேஷ்(21) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். 

தாக்குதல் காட்சி வீடியோ வைரலாகி வருவதால் உடுமலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com