search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு அலுவலர்களும்  தகவல் அறியும் உரிமை    சட்டத்தில்  தகவல் கேட்கலாம்
    X

    கோப்புபடம்.

    அரசு அலுவலர்களும் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் கேட்கலாம்

    • தகவல் அளித்த பின் ஓராண்டு வரை மேல்முறையீடு செய்யாமல் இருந்தால் கோப்புகளை முடிக்கலாம்
    • எக்காரணம் கொண்டும், சீல் வைக்கப்பட்ட அசல் விண்ணப்பத்தை திருப்பி அனுப்ப கூடாது.

    திருப்பூர்:

    சென்னை அண்ணா நிர்வாக பணி பயிற்சி கல்லூரி சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பான பயிற்சி முகாம் 2 நாட்கள் திருப்பூரில் நடந்தது. அரசுத்துறை அலுவலர்கள், பொது தகவல் அலுவலராக செயல்படும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து விளக்கப்பட்டது. பயிற்சி கல்லூரி கூடுதல் இயக்குனர் ராஜேந்திரன் அளித்த பயிற்சியில் அறிவுறுத்தியதாவது:-

    பொது தகவல் அலுவலர்கள், கைவசம் உள்ள தகவல்களை அப்படியே வழங்கலாம். வழங்க முடியாதபட்சத்தில், அந்த காரணத்தையும் கூற வேண்டும். அனுமதிக்கப்பட்டுள்ள அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகளின் தகவல்களை அளிக்கலாம்.கேள்விகள் தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்தால் தகவல் அளிக்க தேவையில்லை. பொதுமக்கள் மட்டுமல்ல, அரசு அலுவலர்களும் இச்சட்டத்தில் தகவல் கேட்கலாம். விண்ணப்பத்தில் 10 ரூபாய் கோர்ட் ஸ்டாம்ப் ஒட்டப்பட்டிருக்க வேண்டும். இல்லாதபட்சத்தில் தகவல் அளித்து மீண்டும் விண்ணப்பம் அளிக்க அறிவுறுத்தலாம்.

    எக்காரணம் கொண்டும், சீல் வைக்கப்பட்ட அசல் விண்ணப்பத்தை திருப்பி அனுப்ப கூடாது. ஒன்றுக்கு மேற்பட்டவர் ஒரே விண்ணப்பத்தில் கேட்டால், தகவல் அளிக்க கூடாது. தகவல் அளித்த பின் ஓராண்டு வரை மேல்முறையீடு செய்யாமல் இருந்தால் கோப்புகளை முடிக்கலாம்.தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்ப காரணம் கூற வேண்டியதில்லை. கேட்கவும் கூடாது. இருக்கும் தகவலை அப்படியே வழங்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட தகவல்களை தயக்கமின்றி தெரிவிக்கலாம். இவ்வாறு அவர்கள் அறிவுறுத்தினர்.

    Next Story
    ×