பல்லடத்தில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து

கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காளிவேலம்பட்டி பிரிவு அருகே வந்தபோது, பிரிவில் இருந்து திடீரென 1 கார் வந்ததால், நிலைதடுமாறிய லாரி காரின் மீது மோதி நடுரோட்டில் கவிழ்ந்தது
கோப்புபடம்
கோப்புபடம்
Published on: 

பல்லடம்:

கோவையில் இருந்து பழைய பேப்பர் லோடு ஏற்றிய சரக்கு லாரி ஒன்று பல்லடம் நோக்கி வந்து கொண்டிருந்தது. கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காளிவேலம்பட்டி பிரிவு அருகே வந்தபோது, பிரிவில் இருந்து திடீரென 1 கார் வந்ததால், நிலைதடுமாறிய லாரி காரின் மீது மோதி நடுரோட்டில் கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த சரக்குகள் ரோட்டில் சிதறின. 

தகவலறிந்து சம்பவ இடம் வந்த பல்லடம் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி பொக்லைன் மூலம் லாரி மற்றும் காரை அகற்றினர். இந்த விபத்தால் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com