அதிக வரத்தால் பீர்க்கங்காய் விலை குறைவு- விவசாயிகள் கவலை

தொடர் மழையால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து கிணறு மற்றும் போர்வெல்களுக்கு அதிக நீர்வரத்து கிடைத்தது.
பீர்க்கங்காய்.
பீர்க்கங்காய்.
Published on

மடத்துக்குளம்:

உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரத்தில் அதிக அளவு காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. அதிலும்  கொடியில் வளரும் பாகற்காய், பீர்க்கங்காய், புடலங்காய், சுரைக்காய் உள்ளிட்ட காய்கறி பயிர்கள் சாகுபடி செய்ய விவசாய நிலங்களில் நிரந்தரமான கல், கம்பிகளை கொண்ட கொடி சாகுபடிக்கு ஏற்ற கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.

தோட்டக்கலைத்துறை சார்பில் இத்தகைய கட்டமைப்பை ஏற்படுத்த மானியமும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கடந்தாண்டு பருவமழை நீண்ட நாட்கள் நீடித்ததால் பந்தல் சாகுபடி முற்றிலுமாக பாதித்தது. குறைந்த அளவு பிடித்த காய்களும் அழுகியதால் ஒரு சீசன் முழுவதுமாக வருவாயை விவசாயிகள் இழந்தனர். மழை இடைவெளி விட்டதும்  பீர்க்கங்காய், புடலங்காய் உட்பட சாகுபடிக்கான பணிகளை விவசாயிகள் மேற்கொண்டனர்.

தொடர் மழையால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து கிணறு மற்றும் போர்வெல்களுக்கு அதிக நீர்வரத்து கிடைத்தது. இதையடுத்து, பந்தல் அமைத்தும் சாகுபடி செய்யாத விளைநிலங்களிலும் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. இதனா நடப்பு சீசனில்  பீர்க்கங்காய் உட்பட காய்கறிகள் வரத்து உடுமலை சந்தைக்கு அதிகரித்து  விலை குறைந்து வருகிறது.

முன்பு பீர்க்கங்காய் கிலோ ரூ.20 முதல் ரூ.25 ரூபாய் வரை விலை நிலவரம் இருந்தது. தற்போது, வரத்து அதிகரிப்பு  பிற மாவட்டங்களிலும் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளதால், பீர்க்கங்காய் விலை கிலோ ரூ. 10, ரூ.20 அளவுக்கு குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com