புடலங்காய் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

கொடி வகைப்பயிரான புடலங்காய் வேகமாக வளரக்கூடியது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

உடுமலை:

உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில் விவசாயிகள் பந்தல் அமைத்து கோவக்காய், பாகற்காய், புடலங்காய் ஆகியவற்றை சாகுபடி செய்துள்ளனர். இதில் புடலங்காய் குறுகியகால பயிர் என்பதால் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். 

நடவு செய்த 25 நாட்களில் அறுவடைக்கு தயாராகிவிடுவதால், வியாபாரிகளும் விவசாய நிலங்களுக்கு நேரடியாகச் சென்று ஒப்பந்த அடிப்படையில் புடலங்காயை கொள்முதல் செய்கின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்:

கொடி வகை பயிரான புடலங்காய் வேகமாக வளரக்கூடியது. தவிர அதிக மகசூல் தரக்கூடியதாகும். வாரம் ஒருமுறை அறுவடை செய்யலாம். 90 நாட்கள் வரை பலன் தரக்கூடியது. இதனால் பந்தல் அமைத்து புடலை சாகுபடி பரப்பை அதிகரித்துள்ளனர். 

டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் புடலங்காய் சாகுபடிக்கு ஏற்ற காலமாக உள்ளது. அறுவடைக்குப் பின் விவசாயிகள் சிலர் நேரடியாக வாரச்சந்தைக்கு கொண்டு சென்றும் விற்பனை செய்கின்றனர் என்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com