search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ஈட்டி வீரம்பாளையம் ஊராட்சியில் ரூ.75 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் - கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    X

    வளர்ச்சி திட்டப்பணிகளை கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.

    ஈட்டி வீரம்பாளையம் ஊராட்சியில் ரூ.75 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் - கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    • திருப்பூர் வடக்கு தொகுதியும், அ.தி.மு.க. திருப்பூர் ஒன்றிய செயலாளருமான கே.என்.விஜயகுமார் பணிகளை தொடங்கி வைத்தார்.
    • முருகேஷ்குமார், ராசப்பன், அருண், யுவராஜ், சரவணன், இந்து முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் எம்.எஸ்.செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் ஊராட்சி ஒன்றியம், ஈட்டி வீரம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.76 லட்சத்து 30 ஆயிரத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன்படி மொய்யாண்டபாளையம் பகுதியில் ரூ.2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்தேக்க தொட்டி ரூ.18 லட்சத்து 50 ஆயிரத்திலும், தட்டான்குட்டை, ஜே.நகர் பகுதியில்22 லட்சத்து 80 ஆயிரத்திலும், புதிய தார்சாலை, அப்பியாபாளையம் ரங்காநகர் பகுதியில் ரூ.21 லட்சத்திலும்புதிய தார்சாலை, எஸ்.எஸ்.நகர் ஆரம்பப்பள்ளி அருகில் ரூ.14 லட்சத்தில் அங்கன்வாடி மைய புதிய கட்டிடம் உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளது. இதற்கான பூமிபூஜை விழா நடைபெற்றது.

    இதில் திருப்பூர் வடக்கு தொகுதியும், அ.தி.மு.க. திருப்பூர் ஒன்றிய செயலாளருமான கே.என்.விஜயகுமார் பணிகளை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட கவுன்சிலர் சாமிநாதன், பேரவை ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, ஊராட்சி மன்ற தலைவர் ராதாமணி சிவகாமி, மாவட்ட வர்த்தக அணி தலைவர் சுப்பிரமணியம், முன்னாள் சேர்மன் தங்கராஜ், ஒன்றிய பொருளாளர் சிவசாமி, ஒன்றிய கவுன்சிலர் ஐஸ்வர்ய மஹராஜ், ஊராட்சி துணைத்தலைவர் ராஜாமணி கந்தசாமி, நிர்வாகி ராம்குமார், மாவட்ட வக்கீல் பிரிவு சித்ரா, சொசைட்டி முன்னாள் தலைவர் கிட்டுசாமி, வார்டு உறுப்பினர்கள் முருகேஷ்குமார், ராசப்பன், அருண், யுவராஜ், சரவணன், இந்து முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் எம்.எஸ்.செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×