பூசாரிகளுக்கு பசுமாடுகள் வழங்கும் நிகழ்ச்சி

கிராம கோவில்களின் பூசாரிகள் சிலர் தங்களது பகுதிகளில் சிதலமடைந்த கோவில்களை புனரமைப்பு செய்யவும், பூசாரிகளின் குடும்ப நலன் கருதி அரசு சலுகைகளை வழங்கவும் கோரிக்கை விடுத்தனர்.
காங்கயம் சிவன்மலை முருகன் கோவில் சன்னிதானத்தில் பக்தர்கள் மற்றும் உபயதாரர்கள் மூலதானமாக வழங்கப்பட
காங்கயம் சிவன்மலை முருகன் கோவில் சன்னிதானத்தில் பக்தர்கள் மற்றும் உபயதாரர்கள் மூலதானமாக வழங்கப்பட
Published on

காங்கயம்:

காங்கயம் சிவன்மலை முருகன் கோவில் சன்னிதானத்தில் பக்தர்கள் மற்றும் உபயதாரர்கள் மூலதானமாக வழங்கப்பட்ட பசுமாடுகளை கிராமங்களில் ஒரு கால பூஜை பணியில் ஈடுபடும் பூசாரிகளுக்கு உபயமாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு பசுமாடுகளை வழங்கினார்.   

அப்போது கிராம கோவில்களின் பூசாரிகள் சிலர் தங்களது பகுதிகளில் சிதலமடைந்த  கோவில்களை புனரமைப்பு செய்யவும், பூசாரிகளின்  குடும்ப நலன் கருதி அரசு சலுகைகளை வழங்கவும் கோரிக்கை விடுத்தனர். 

தொடர்ந்து சிவன்மலை முருகன் கோவிலின் நிர்வாக பணிகளை தீவிரப்படுத்தவும், பக்தர்களின் வசதி வாய்ப்பை பெருக்கவும் பாதுகாப்பு வசதிகளை ஊக்குவிக்குமாறும் கோவில் செயல் அலுவலரை கேட்டுக்கொண்டனர்.  

நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அதிகாரிகள், திருப்பூர் மாநகராட்சி கவுன்சிலர் பத்மநாபன், காங்கயம் மேற்கு நகர தி.மு.க. செயலாளர் காயத்ரி சின்னசாமி, கீரனூர் பஞ்சாயத்து தலைவர் ஈஸ்வர மூர்த்தி, மரவாபாளையம் பஞ்சாயத்து தலைவர் கீதாமணி சிவகுமார், பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலர் சந்தான லட்சுமி, அருண் தீபக், மடவளாகம் ஈஸ்வரன் கோவில் நிர்வாக தலைவர் தங்கமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com