பல்லடத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்- நாளை நடக்கிறது

புகார்கள் ஏதேனும் இருந்தால் தெரியப்படுத்துமாறு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் பல்லடம் செயற்பொறியாளர் ரத்தினகுமார் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பல்லடம்:

பல்லடம் கோட்ட மின் நுகர்வோர் குறைகேட்பு முகாம் பல்லடம் மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை 16&ந் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு பல்லடம் மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் சகாய ராஜ் தலைமையில் நடைபெறுகிறது.

இதில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது மின்சார விநியோகம் குறித்து குறைகள்,புகார்கள் ஏதேனும் இருந்தால் தெரியப்படுத்துமாறு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் பல்லடம் செயற்பொறியாளர் ரத்தினகுமார் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com